சென்னை, 15 ஜனவரி 2026 :
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை சார்பில் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மனிதநேய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

15.01.2026 அன்று நள்ளிரவு (அதிகாலை நேரத்தில்) நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக நலனுக்காக இடைவிடாது பணியாற்றி வரும் பணியாளர்களையும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களையும் கௌரவிக்கும் நோக்கில் இலவச இனிப்புகள், வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.
இந்த நலத்திட்டம் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர்
திரு. டாக்டர். டி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் திட்டமிடப்பட்டு, சில ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டது.
பொங்கல் திருநாளை அனைவரும் சமமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்பதே அறக்கட்டளையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.


— சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை —
