Founder of Siva Siva Anbae Sivam Trust, Mr. T. Sivabalakrishnan Honoured with Honorary Doctorate in Social Service

சென்னை, ஜனவரி 15 :
ரெட்ஹில்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிவசிவ அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் சமூக சேவையாளர் தி. சிவபாலகிருஷ்ணன் அவர்களுக்கு, சமூக சேவையில் அவரின் நீண்டகால அர்ப்பணிப்பை பாராட்டி “Honorary Doctorate – Doctor of Social Service” என்ற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த கௌரவ பட்டமளிப்பு விழா, XFA University சார்பில் நடைபெற்ற சிறப்பு விழாவில் நடைபெற்றது. கல்வி, மருத்துவம், ஆன்மிகம், உணவு வழங்கல், ஏழை எளிய மக்களின் நலன், பொதுநல சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த பட்டம் வழங்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவசிவ அன்பே சிவம் அறக்கட்டளை மூலம் இலவச மருத்துவ முகாம்கள், உணவு வழங்கும் திட்டங்கள், ஆன்மிக வழிகாட்டுதல், கல்வி உதவிகள் மற்றும் மக்கள் நல சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஏழை, எளிய மக்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அவர் செய்த சேவைகள் பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்த நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழக நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, தி. சிவபாலகிருஷ்ணன் அவர்களின் சேவையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த கௌரவ டாக்டர் பட்டம், சமூக சேவையில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு ஊக்கமாக அமையும் என நிகழ்வில் பேசியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping